Saturday, 6 October 2012

ஸாங்கிய யோகம். 2

http://wayang.files.wordpress.com/2011/03/bhagavad_gita.jpg

ஸாங்கிய  யோகம். 2  

தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥

உடலைப் பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை. 

மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:கதா:।
ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத॥ 2.14 ॥

குந்தி புத்திரா ! சுகதுக்கங்களின் நிலையற்ற தோற்றமும், காலப் போக்கிலான அவற்றின் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவது போலவே, புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றனவாதலால், பரத குலத்தோன்றலே, இவைகளால் பாதிக்கப்படாமல் பொறுத்துக்கொள்ளக் கற்றுக் கொள்வாயாக. 

யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப।
ஸமது:கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே॥ 2.15 ॥

மானுடரில்  சிறந்தோனே! (அர்ஜுனா), இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவனும் இருநிலையிலும் தந்நிலை மாறாதவனுமே விடுதலைக்கு நிச்சயமாய்த் தகுதி பெற்றவனாயிருக்கிறேன். 

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:।
உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஷிபி:॥ 2.16 ॥

உண்மை அறிந்தவர்கள், நிலையற்றவற்றிற்கு நீடிப்பும், நிலைத்தவைக்கு முடிவுமில்லையென்று முடிவு செய்துள்ளனர். இவை இரண்டின் இயற்கைகளையும் ஆராய் ந்தே இதை இவ்வாறு தீர்மானித்துள்ளனர். 

அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥

உடல் முழுவதும் பரவியிருப்பது அழிவற்றதென்று அறிவாய்! அழிவற்றதான ஆத்மாவைக் கொல்லக் கூடியவர் எவருமில்லை. 

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:।
அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥

ஜட உடல் மட்டுமே அழிவுறுவது. உடலில் வாழும் ஜீவாத்மாவோ நித்தியமானது, அளவிட இயலாதது, அழிவற்றது. எனவே பரதகுலத் தோன்றலே, போரிடுவாய்! 

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஷ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே॥ 2.19 ॥

ஜீவாத்மா கொலை புரிகின்றதென்றோ, கொல்லுகின்றதென்றோ கருதுபவன் புரிந்து கொள்ளாதவனே. அறிவுள்ளோர் ஆத்மா அழிவதோ, அழிப்பதோ இல்லை என்பதை அறிகின்றார்கள். 

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।
அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥

ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவன் இல்லாமல் போவதுமில்லை. அவன் பிறப்பற்ற, நித்தியமான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனாவான். உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை. 

வேதாவிநாஷிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்।
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்॥ 2.21 ॥

பார்த்தா! ஆத்மா அழிவற்றது, பிறப்பற்றது, மாற்றமில்லாததென்றறிந்த ஒருவன் யாரையாகிலும் கொல்வதோ, கொலை செய்யப்படக் காரணமாவதோ எப்படி? 

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோ அபராணி।
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ॥ 2.22 ॥

பழையவற்றைக் களைந்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி,  ஆத்மா புதிய உடல்களை ஏற்கின்றது.

நைநம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:।
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஷோஷயதி மாருத:॥ 2.23 ॥

ஆத்மா எந்த ஆயுதத்தாலும் துண்டிக்கப்பட முடியாததும், நெருப்பால் எரிக்கப்பட முடியாததும், நீரால் நனைக்கப்பட முடியாததும், காற்றால் உலர்த்தப்பட முடியாததுமாகும்.

அச்சேத்யோ அயமதாஹ்யோ அயமக்லேத்யோ அஷோஷ்ய ஏவ ச।
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோ அயம் ஸநாதந:॥ 2.24 ॥

தனி ஆத்மா பிளக்க முடியாதது. கரைக்க முடியாதது. எரிக்கவோ, உலர்த்தவோ முடியாதது. நித்தியமானது , எங்கும் நிறைந்தது, அசையாதது, என்றும் மாறாமலிருப்பது.

பாராயணம்  செய்ய 

தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥

மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:கதா:।
ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத॥ 2.14 ॥

யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப।
ஸமது:கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே॥ 2.15 ॥

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:।
உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஷிபி:॥ 2.16 ॥

அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:।
அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஷ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே॥ 2.19 ॥

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।
அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥

வேதாவிநாஷிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்।
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்॥ 2.21 ॥

நைநம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:।
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஷோஷயதி மாருத:॥ 2.23 ॥

அச்சேத்யோ அயமதாஹ்யோ அயமக்லேத்யோ அஷோஷ்ய ஏவ ச।
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோ அயம் ஸநாதந:॥ 2.24 ॥

No comments:

Post a Comment