Wednesday, 10 October 2012

நினைவின் நதியில்-1

க.நா.சு 

நினைவின் நதியில்-1

நினைவின் நதிக்கரையில் ஒதுங்கி நின்று பார்க்கும்போது வந்த அலைகள் போன அலைகள் நீந்திய ஞாபகங்கள் என்று என்று  என்ன என்னவோ தோன்றுகின்றன .முக்கியமானவை  திருப்பத்தூர் நூலகத்தில்  நான் வாசித்த அயல்நாட்டு நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
நிலவளம், திமிங்கல வேட்டை, மத குரு, அன்னை இப்படி ஒரு பெரிய பட்டியல் 
அப்படிப் பட்டியலிட்டால் அவற்றை வழங்கிய அட்சயபாத்திரமாக முன்னால வந்து நிற்கிறார் க.நா. சு. 
சென்ற டிசம்பரில் நூற்றாண்டு விழா கண்ட க.நா.சு யார்? 
இப்படி ஒரு கேள்வி எதிர்காலத்தில் எழும் என்று பலபேருக்கு ஒரு சந்தேகம்  நாம் நினைத்துக்கொண்டே தான் இருக்கிறோம் .காலம் அவரை மறக்காது என்பதற்கான உத்தரவாதம் தான் அவரது நூற்றாண்டு விழா கொண்டடப்பட்டதன உட்பொருள்  

 க.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988)

நவீன தமிழ் இலக்கியம  என்பது த்தின் முன்னோடிகளின் முன்னோடிகளோடு உடன்வாழ்ந்து தமிழின் நவீனத் தன்மைக்கு ஒரு முகவரி தந்தவர் அவர்   க.நா.சுப்ரமண்யம், 1912ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வலங்கைமானில் பிறந்தார். கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் என்ற க. நா. சு. சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். 
உலக இலக்கியத்திற்கு இணையாகத் தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்று ஏனோ அவருக்குத் தோன்றியது .மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் நமக்குள்ளே பேசக்கேட்டு காது பொறுக்க முடியாமல் வந்த எண்ணமா ? உலக இலக்கியங்களை வாசித்த ருசியா? தெரியவில்லை 
க.நா.சு, சுவாமிமலை கோவிலருகே உள்ள தொடக்கப்பள்ளியில் தொடங்கி, பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் தன் படிப்பை தொடர்ந்தார். அவருடைய தந்தைக்கு சுப்பிரமணியத்தை ஏதாவது ஓர் அரசுப் பணியில் அமர்த்திவிட எண்ணம். எனவே, ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றிப் படிக்க வைத்தார். 
ஆனால் க.நா.சு கும்பகோணம் அரசுக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலை என விரிந்த அவருடைய கல்விப் பயணத்தின் போதே எழுத்து பணியில் இறங்கி இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கிய மேதைகளும், இருபதாம் நூற்றாண்டின் என் தலைமுறைப் புரட்சி எழுத்தாளர்களான ஜேம்ஸ் ஜாய்ஸும், டி.எஸ். எலியட்டும், எஸ்ரா பவுண்டும் வகுத்துக் கொடுத்த புரட்சி மரபுக்கு நான் வாரிசு என்கிற எண்ணம் க.நா.சுவுக்கு இருந்தது.  தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். 1930களில் தமிழ் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்த அவர் தினமணி அலுவலகத்தில், தன் எழுத்துகளுடன் கால் பதித்தார். 

ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi – Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். ‘பொய்த்தேவு’ புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1946ல் இவர் எழுதியது  இந்த நாவல்.  1986ம் ஆண்டு அவரது ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். 
40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 80க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், தத்துவ விசார நூல்கள் 10, இலக்கிய விசாரம் என்ற கேள்வி பதில் நூல் ஒன்று, உலகத்துச் சிறந்த நாவல்கள், உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் என மூன்று தொகுதிகள், இலக்கிய விமர்சன நூல் ஒன்று. இன்னும் பல நூல்களை தம் 86 வயதுக்குள் எழுதிக் குவித்தவர் இவர். அதற்கு மூல காரணமாக அமைந்தது, சிறுவயதிலேயே இவர் ஊன்றிப் படித்த இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள்தான்.
படிக்கும் காலத்திலேயே ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம். வெளிநாட்டு மற்றும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் அவருடைய கதை கட்டுரைகள் வெளிவந்தன. 1935-இல் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திவந்த காந்தி இதழில் வெளிவந்த கதைகள் அவரது சிந்தனையை தமிழின்பால் திருப்பின. தொடர்ந்து மணிக்கொடி அவரை ஈர்த்தது. தமிழில் எழுதத் தொடங்கினார் க.நா.சு.
மலையாளக் கவிஞரான குமாரன் ஆசான் நினைவாக உருவாக்கப்பட்ட ஆசான் கவிதைப் பரிசு 1979ஆம் ஆண்டு க.நா.சுவுக்கு வழங்கப்பட்டது.   அவருக்குக் கிடைத்த முதல் தனிப்பட்ட அங்கீகாரம் அதுதான். அதற்கு முன் தமிழக அரசின் பரிசை  ’கோதை சிரித்தாள்’ என்ற நூலுக்காகப் பெற்றிருந்தார்.க.நா.சுவின் மறைவுக்குப் பின்பு, அவர் சேகரித்துவைத்திருந்த புத்தகங்களையும் அவரது கையெழுத்துப் படிகளையும் அவரது மருமகன் பாரதி மணி சுந்தர ராமசாமி நினைவு நூலகத்துக்குக் கொடுத்தார்.
 நினைத்துப் பார்த்தால் க.நா. சு என்ற இலக்கிய மேதை தோன்றாதிருந்தால் உலக இலக்கியப் போக்கு பற்றி தமிழர் அறிவு இவ்வளவு வளர்ந்திருக்குமா? சந்தேகம் தான்.
வையவன் 


No comments:

Post a Comment