பாகம் 1
முதல் பகுதியின் முக்கிய இடங்களும் கதாபாத்திரங்களும்
இடங்கள்: பாரத ஒருங்கிணைப்பு: இருபத்தைந்தாம் நூற்றாண்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான். நேபாளம், பூடான், மயன்மார் (பர்மா). இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா. இவற்றை உள்ளடக்கிய பகுதி.
தக்கன் கண்ட்: பாரத ஒருங்கிணைப்பின் ஒரு மாநிலம். (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் தமிழ்நாடு)
ஷெனாய்: தக்கன் கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் சென்னை)
தஞ்சு: தக்கன் கண்ட் மாநிலத்தின் தலைநகர். (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் தஞ்சாவூர்)
மத்ரா: தக்கன் கண்ட் மாநிலத்தில் ஒரு பெரிய நகரம் (இருபத்திஒன்றாம் நூற்றாணடின் மதுரை)
கோட்கல்: தக்கன் கண்ட் மாநிலத்தில் ஒரு மலை வாழிடம் (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் கொடைக்கானல்)
காரைகுட்: தக்கன் கண்ட் மாநிலத்தில் ஒரு நகரம் (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் காரைக்குடி)
உரிமைக் குடிமக்கள்:
நிமிஷா: ஷெனாயில் வாழும் ஒரு இளம் பெண்.ஷிபாலி: நிமிஷாவின் தாய். ஒரு சீனக் கம்பெனியின் ஷெனாய் கிளையில் பணி செய்பவள்.
ஸஹஜா: கோட்கல் விண்நோக்கு நிலையத்தில் பணி செய்யும் விஞ்ஞானி.
ஸோம்காந்த்: ஸஹஜாவின் மேலதிகாரி. காரைகுட் விண் ஆராய்ச்சி மையத்தில் ஒரு வல்லுநர்.
எடுபிடிகள்:
காமாட்சி: ஷிபாலி வீட்டில் வேலை செய்யும் இளம்பெண். [நிலவுமொழி பரம்பரையில் வந்தவள்]ஈஸ்வரன்: தஞ்ஜூவில் பணி செய்பவன். இந்தி தெரிந்தவன் (சிவாச்சாரி பரம்பரையில் வந்தவன்)
சங்கரன்: ஈஸ்வரனின் தந்தை.
அழகேசன்: மத்ராவில் வாழும் ஒரு மல்லன் (வெற்றி மாறன் பரம்பரையில் வந்தவன்)
அடுத்த பதிவில் கதை தொடங்குகிறது
ஒரு முக்கிய அறிவிப்பு :
இத் தொடரைப் படித்து விட்டு கருத்து எழுதும்
அன்பர்கள் ஒவ்வொருவருக்கும்
இந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல் மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம்
No comments:
Post a Comment