Tuesday, 16 April 2013

கழிவுப் பொருள் வீடு

கழிவுப் பொருள்  வீடு

அமெரிக்காவின் California மாநிலத்தைச் சேர்ந்த Wales நகரச் சுற்றுப் புறத்தில் ஒரு புகழ்பெற்ற வீடு உள்ளது. அதனை Nit Wit Ridge என்று அழைக்கின்றனர். 0.01 சதுரக் கிலோமீட்டர் வாய்ந்த இவ்வீட்டுக்கு, 90 ஆண்டுகள் வரலாறு உண்டு. அது அப்பிரதேச முக்கிய அடையாளக் கட்டிடம் மட்டுமல்ல, அரசு சாரா கலைச் சின்னமுமாக விளங்குகிறது. இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த வீடு, இலட்சக்கணக்கான கழிவுப் பொருட்களால் கட்டப்பட்டது. Harold Beal என்னும் கட்டிடக்கலைஞர் 50 ஆண்டுகளைச் செலவிட்டு, இவ்வீட்டை கட்டிமுடித்தார். அவர் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தி வந்த பணியாளர். பணியின்போது எல்லா கழிவுப் பொருட்களைப் பற்றியும் படித்தார். அதனால், அவர் Wales நகரில் அனைத்து கழிவுப் பொருட்களையும் திரட்டி, இயற்கை மூலப் பொருட்களுடன் இணைந்து, வாழ்வின் பெரும்பாலன நேரத்தைப் பயன்படுத்தி, இவ்வீட்டைக் கட்டினார்.
அவர் 1928ஆம் ஆண்டு, இக்கடமையைத் துவங்கினார். முதன்முதலாக, அவர் மலையில் 0.01 சதுரக் கிலோமீட்டர் வாய்ந்த ஒரு பெரிய குழியைக் குடைந்து, பல்வேறு கழிவுப் பொருட்களை அக்குழியில் போட்டார். பின்னர், அவர் அந்தக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி, கதவு, கட்டிடம், நீரூற்று, வழி ஆகியவற்றைக் கட்டினார். அவர் பயன்படுத்திய கழிவுப் பொருட்களில், கல், பீர் புட்டி, மோட்டார் உதிரிப்பாகங்கள், பழைய அடுப்புகள், கூரை ஓடுகள் ஆகியவை அடங்கின. இந்த வீடு பழுதடைந்து வருகிறது என்ற போதிலும், மிகவும் அதிகமான மதிப்பு வாய்ந்ததாக இன்றும் உள்ளது.
1992ஆம் ஆண்டு, 96 வயதான Harold Beal உயிரிழந்தனார். 1999ஆம் ஆண்டு, Michael மற்றும் Stacey O'Malley என்னும் இருவர் இவ்வீட்டை வாங்கினர். Harold Bealயின் நகைச்சுவை மற்றும் பேரார்வத்தை நினைவு கூர்வதற்காக, அவர்கள் இவ்வீட்டைச் சுற்றுலாக் காட்சி தலமாகச் சீராமைத்தனர்.

No comments:

Post a Comment