![]() |
மற்றொரு மகுடம் |
எந்தச் சிறப்பு வந்தாலும் அடக்கமாக ஒரு புன்முறுவலுடன் சந்திக்கும் ஓவியர்
தமிழுக்கு உலக நாயகனும் ஒப்பற்ற பன்முக நடிகருமான பத்மஸ்ரீ. திரு.கமலஹாசன் அவர்களின் அன்புக்கரங்களால் வழங்கப்பட்ட இந்த இலச்சினை பதித்த கேடயம் ஓவியர் திரு.தமிழ் தமிழக சினிமாப் பத்திரிகை யாளர் சங்கத்தால் கடந்த 21-1-2013ல் 4 Framesபிரிவ்யூ தியேட்டரில் வழங்கப்பட்டது.இது சினிமாப் பத்திரிகையாளர் சங்கத்துக்கு அவர் வரைந்து கொடுத்த சின்னத்தைப் பாராட்டி வழங்கப்பட்டது.
ஓவியர் தமிழின் அடக்கத்தை, பலமொழிகளில் வானளாவிய புகழ் கொண்ட கமல் அவர்கள் மூலம் மீண்டும் ஒரு மகுடம் சந்தித்திருக்கிறது.இப்படி ஒரு நினைவுப் பட்டயம் வழங்க வேண்டும் என்று கருதி ஏற்பாடு செய்த சினிமாப் பத்திரிகையாளர் சங்கத்துக்கும் இந்தச் சின்ன நிகழ்ச்சிக்கெல்லாம் நான் வருவதா என்ற கேள்விக்கே இடமின்றி மிக்க பெருந்தன்மையோடு வந்து ஓவியர் தமிழுக்குச் சிறப்புச் செய்த கமலுக்கும் இணையவெளி தன இதய பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
வளர்க சங்கமும் ஓவியர் தமிழும்.
[வையவன்-ஆசிரியர்]
No comments:
Post a Comment