Saturday, 29 September 2012

தலைப்புச் செய்திகள் (29-12-2012)


தலைப்புச் செய்திகள் (29-12-2012)
"உரிய பாதுகாப்பில்லாவிட்டால் அணுஉலையை மூடுவோம்" உச்சநீதிமன்றம் எச்சரிக்கிறது 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஏற்பாடுகள் தமக்கு திருப்தியாக இல்லாவிட்டால், அதன் உரிமத்தை ரத்து செய்வதற்கும் தயங்க மாட்டோம் என்று இந்திய உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அளித்த 17 பரிந்துரைகளில் இன்னும் 11 பரி்ந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை, முறையான சுற்றுச்சூழல் அனுமதியில்லை என்ற அம்சங்களின் அடிப்படையிலும், அணு உலை விபத்து ஏற்பட்டால் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எல்லா இயற்கை வளங்களுக்கும் ஏலம் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம் கருத்து

ஏல முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற தீர்ப்பு, தொலைத் தொடர்புத்துறையின் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், எல்லா இயற்கை வளங்களுக்கும் அந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இயற்கை வளங்களை விநியோகிக்கும்போது, மக்கள் நலனுக்கு எது உகந்ததாக இருக்குமோ அந்த முறையை அரசு பின்பற்றலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மிருகக் காட்சி சாலையில் புலி கொலை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத் தலைநகர் ஈட்டா நகரில் இருக்கும் வன விலங்குக் காட்சியகம் ஒன்றில் புகுந்து, அங்கிருந்த பெண் புலி ஒன்றைக் கொன்ற ஒரு குழுவினரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment